முள்ளுக்குள்ளே லீலி புஷ்பமாய்
முள்ளுக்குள்ளே
லீலி புஷ்பமாய்
- என்
நேசர்
என்னை தேடிடுவாரோ
மருந்தாவேன்
நான், நல்ல மருந்தாவேன்
நான்
மனிதரை
மாற்றும் மருந்தாவேன்
நான்
1. அழைத்திடும்
சத்தம் கேட்டு
நானும்
ஆயத்தம் ஆகிடுவேன்
என் அன்பரின்
குரல் கேட்டு
என்னை அவருக்காய்
படைத்திடுவேன்
2. காயங்கள்
ஆற்றிடுவார்
என்னை கனிவோடு நோக்கிடுவார்
என் வேதனைக்கு
மருந்தாவார்
நாளும்
வெற்றி பெற செயல்படுவார்
3. மத்திய
வானத்திலே
இயேசு சீக்கிரம்
வந்திடுவார்
நாம் மகிழ்வோடும்
காத்திருப்போம்
நம்மை மகிமையில்
சேர்த்திடுவார்
Comments
Post a Comment