மகிமை தேவன் மண்ணில் வந்திட

மகிமை தேவன் மண்ணில் வந்திட

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    மகிமை தேவன் மண்ணில் வந்திட

                        குழந்தை கோலம் கொண்ட நாளிதே

                        மனித பாவம் சாபங்களெல்லாம்

                        மன்னவர் தோளில் பாரமேற்றார்

                                    கொட்டுங்கள் மேளம்

                                    இயேசு நாதரை வாழ்த்திட

                                    கின்னரங்களும் வீணைகளும்

                                    இன்பமாய் மீட்டிடவும்

                                    மாந்தர்களே ஒன்றாய்க் கூடுவோம்

                                    பாடுங்கள் பாடி ஆடுவோம் - மகிமை

 

1.         அன்னை மடியில் கண்மூடி தூங்கிடும்

            அழகுப் பிள்ளையின் தங்க மேனியே

                        கண்டீரோ காட்சியை

                        கேட்டீரோ நற்செய்தியை

                        இரட்சகர் பாலனாய்... வேந்தனே பாலனாய்... - கொட்டுங்கள்

 

2.         ஆட்டிடையர் கூட்டம் காவல் காக்கவே

            தூதர்கூட்டம் சேர்ந்து பாடும் கானமே

                        கண்டீரோ காட்சியை

                        கேட்டீரோ நற்செய்தியை

                        இரட்சகர் பாலனாய்... வேந்தனே பாலனாய்... - கொட்டுங்கள்

 

3.         ஜீவன் தந்த தீயாகமான இயேசுவே

            ஜீவ ஊற்றாய் தான் இறங்கி வந்ததால்

                        கண்டீரோ காட்சியை

                        கேட்டீரோ நற்செய்தியை

                        இரட்சகர் பாலனாய்... வேந்தனே பாலனாய்... - கொட்டுங்கள்

 

 

Tamil Lyrics : Dr. A. Pravin Asir

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே