20 October 2025

மாலையில் துதிப்போம் மகிழ்வுடனே

மாலையில் துதிப்போம் மகிழ்வுடனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மாலையில் துதிப்போம்

                        மகிழ்வுடனே மனக்களிப்புடனே

                        மாண் புகழ் இயேசுவை வானவரோடே

 

1.         காலை மாலை உறங்காரே - நம்

            காவலனாயிருப்பாரே

            ஆவலுடன் துதி சாற்றிடுவீரே - மாலை

 

2.         கிருபையின் வாக்கு தந்தாரே - அதை

            அருமையாய் நிறைவேற்றினாரே

            உரிமையுடன் புகழ் சாற்றிடுவீரே

 

3.         சோதனை வந்திட்ட நேரம் - அவர்

            போதனை செய்தார் அந்நேரம்

            சாதனையாகவே நிற்கச் செய்தாரே

 

4.         அழைத்த மெய் அழைப்பிலே தானே

            நாம் உழைத்திட பெலன் தந்த தேனே

            ஏகமாய் ஏசுவின் நாமத்தைதானே

 

5.         வயல் நிலம் ஏராளம் காட்டி - அதில்

            அறுவடை தாராளம் ஏற்றி

            அரிக்கட்டோடே வர கிருபை செய்தாரே

 

6.         ஆணி துளைத்திட தானே தன்னை

            தியாகமாய் கொடுத்திட்ட தேனே

            ஏகமாய் ஏசுவின் நாமத்தை தானே

 

7.         ஆயிரம் நாவிருந்தாலும் அவர்

            அன்பை துதிக்கப் போதாது

            பதினாயிரம் பேரில் சிறந்தவரை நாம்

 

8.         உன்னதருக்கு மகிமை

            இந்த பூமியிலே சமாதானம்

            மனுஷரில் பிரியம் உண்டாகச் செய்தாரே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...