மனமிரங்கும் தெய்வம் இயேசு

மனமிரங்கும் தெய்வம் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மனமிரங்கும் தெய்வம் இயேசு

            சுகம் தந்து நடத்திச் செல்வார் - 2

 

                        யெகோவா ரஃப்பா இன்றும் வாழ்கிறார்

                        சுகம் தரும் தெய்வம் இயேசு

                        சுகம் இன்று தருகிறார் - மனமிரங்கும்

 

1.         பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் மாமி

            கரத்தைப் பிடித்து தூக்கினார் - 2

            காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று - அவள்

            கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள் - 2 - யெகொவா  

 

2.         குஷ்டரோகியைக் கண்டார் இயேசு

            கரங்கள் நீட்டித் தொட்டார் - 2

            சித்தமுண்டு சுத்தமாகு - என்று

            சொல்லி சுகத்தைத் தந்தார் - 2 - யெகொவா  

 

3.         நிமர முடியாத கூனி அன்று

            இயேசு அவளைக் கண்டார் - 2

            கைகள் அவள் மேலே வைத்தார் - உடன்

            நிமிர்ந்து துதிக்கச் வைத்தார் - 2 - யெகொவா  

 

4.         பிறவிக் குருடன் பர்த்திமேயு அன்று

            இயேசுவே இரங்கும் என்றான் - 2

            பார்வையடைந்து மகிழ்ந்தான் - உடன்

            இயேசு பின்னே நடந்தான் - 2 - யெகொவா  

 

5.         கதறும் பேதுருவைக் கண்டு இயேசு

            கரங்கள் நீட்டிப் பிடித்தார் - 2

            படகில் ஏறச் செய்து அவர்

            கரையில் கொண்டு போய்ச் சேர்த்தார் - 2 - யெகொவா  

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே