முடிந்ததென்று இயேசுநாதர்
204. இராகம்: சங்கராபரணம் தாளம்: ஆதி
“பாடுபட்ட
இயேசையா” என்ற
மெட்டு
பல்லவி
முடிந்ததென்று
இயேசுநாதர்
முழக்கத்துடன்
மொழிந்தனர்
அனுபல்லவி
அடியாருக்காய்
யாவற்றையும்
முடித்துவிட்ட
படியினால் - முடிந்ததென்று
சரணங்கள்
1. நியாயப்
பிரமாண மெல்லாம்
நிறைவேற்றியே
தீர்ந்த பின்
தியாக பலியாகத் தம்மைச்
செலுத்துகின்ற
தருணத்தில் - முடிந்ததென்று
2. மோசே முதலான
தீர்க்கர்
முன்னுரைத்த
வைகளைக்
காசினியில்
வந்துதித்துக்
கர்த்தன்
நிறை வேற்றினார்
- முடிந்ததென்று
3. இரட்சண்ய
ஏற்பாட்டைத்
தம்
இரத்தத்தாலே
முத்திரித்து
இரக்கத்தினால்
மோட்ச வாசல்
திறந்து
வைத்து விட்டபின்
- முடிந்ததென்று
4. முற்றும்
நம்மைத் தாங்கிடவும்
முழுவதுமாய்
இரட்சிக்கவும்
குற்றமின்றித்
தமக்கு முன்னே
நிற்கச்
செய்யவும் வல்லோர் - முடிந்ததென்று
Comments
Post a Comment