மானிலத்தோர் பாவத்தால் வானலோக நாதனார்

மானிலத்தோர் பாவத்தால் வானலோக நாதனார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

1.       மானிலத்தோர் பாவத்தால் வானலோக நாதனார்

            மானிடரின் சாயலாய் வாதையுற வந்தனர்.

 

2.         எத்தனையோ லோகத்தை சித்திரம் போல் வைத்தனர்

            எத்துனையுமின்றியே ஏகி நிற்பது தேதுகான்

 

3.         அன்பு நிறைந்தவல்லலை அறிந்து கொள்ளப்பாதகன்

            பின் கட்டாக கட்டின துன்பத்துக் குள்ளாக்கினாள்.

 

4.         முள்முடி சூடியே மூர்க்கமாய் அடித்த பின்

            வல்லலே வாழ்க என வாழ்த்தினார்கள் நிந்தையாய்

 

5.         கடும்பகல் உஷ்ணமேற கனத்த சிலுவை சேர

            கொடும் பகைவர் சூழ்ந்திட கொலை களத்துக் கேரினார்

 

6.         வையகத்தை மீட்டிட வாதை மீகப்பட்டீரோ

            தூய்ய திரு மேனியால் சொரி வெள்ளம் சிந்தினார்

 

7.         லோக ஜீவன் யாவையும் தாகம் தீர்க்கும் நற்சுதன்

            தாகத்தால் நாவரண்டீதோ சஞ்சலம் அடைந்தார்.

 

8.         பேதையரைக் காத்திட பேரின்பத்தில் சேர்ந்திட

            பாதகருக்காய் பதில் பாவமாக்கப் பட்டீரோ.

 

9.         நெஞ்சமே இவ்வன்பரை நேசித்தவர் பாதத்தை

            தஞ்சமென நம்பினால் சாந்தமும் வாழ்வாரே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே