தேவா உம் வாசஸ்தலம்
1. தேவா
உம் வாசஸ்தலம்,
யாவிலும் மகத்துவம்
விண்ணில்
அது இனிமை, மண்ணில்
மெத்த அருமை
தூதரோடு
கூடவும், நாதன்
உம்மை காணவும்
பொங்கும்
அன்பில் மூழ்கவும்,
ஏங்குதே என் ஆத்துமம்
2. பீடத்தண்டை
பறவை, கூடுகட்டி
வாழ்வதை
கண்டதால்
நான் உம்மிடம்,
அண்டினேன்
நீரே தஞ்சம்
வழி
ஒன்றும் தோன்றாமல், பேழை சென்ற
புறாவைப் போல்
களைதும்மை
அடைந்தோர்,
இளைப்பாறி களிப்பார்
3. உம்மை
அடைத்தோருக்கு,
இம்மையிலும் களிப்பு
அவர்
பெறும்
ஆகாரம், ஜீவ நீரும்
மன்னாவும்
திரு
சந்நிதானத்தை
சேரும் கடை நாள்
வரை
நீரே
அவர் முன் செல்வீர்,
அருள் பெலன் அளிப்பீர்
Comments
Post a Comment