06 October 2025

மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம்

மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் நிறைந்தவரே

            கண்ணுக்கு இமை போல் எம்மை காக்கின்ற ரட்சகரே

            வழிபார்த்து நிற்கின்றோம் வாருங்கள் இயேசய்யா - (2)

            விழி நோகப் பண்ணாமல் விரைந்தே நீர் வாருமய்யா

 

                        இயேசு ராஜா என்னோடு பேசு ராஜா

                        பேசும் தெய்வம் நீர்தானே இயேசு ராஜா - 2

 

1.         கல்வாரி சிலுவையிலே கர்த்தாவே ரத்தம் சிந்தி

            கருணையோடு எம்மை காக்க சிலுவையில் ஜீவன் தந்தீர்

            வேண்டும் வரம் கேட்கின்றோம் மீண்டும் வர பார்க்கின்றோம் - (2)

            ஆண்டவரே வாரும் ஐயா அன்புமுகம் காட்டும் ஐயா - (2) - இயேசு

 

2.         கூப்பிட்ட குரல் கேட்டு குறை தீர்க்க வருபவரே

            கொடுமையான வியாதியையும் குணமாக்கும் வைத்தியரே

            கண்ணீரின் பாதையிலே கரம்பிடித்து நடப்பவரே - (2)

            கண்ணோக்கிப் பாருமய்யா கர்த்தாவே வாருமய்யா - (2) - இயேசு

 

 

- ஞானசேகர்

 

 

YouTube Link

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...