மனம் திறந்து உம்மிடம் பேசினேன்
மனம்
திறந்து உம்மிடம்
பேசினேன்
மனக்கவலை
மறைந்து போனதையா
உள்ளம்
உடைந்து உம்மை
நோக்கினேன்
நறுமணம்
வாழ்வில் வந்ததையா
1. கறுப்பு
நிறம் நானென்று
சொன்னேன்
ரூபவதி
நீ தான் என்றீர்
வறண்டு
போன நிலம் நான்
என்றேன்
ஜீவத்தண்ணீர்
நானே என்றீர்
2. பெலவீனன்
நான் என்று சொன்னேன்
என் கிருபை
போதும் என்றீர்
காயப்பட்ட
மனிதன் நான் என்றேன்
பரிகாரி
நானே என்றீர்
3. துணை ஏதும்
இல்லை என்று சொன்னேன்
நான் உனக்கு
போதும் என்றீர்
இந்த பூமி
சொந்தமல்ல என்றேன்
சொந்த தேசம்
சேர்ப்பேன் என்றீர்
Comments
Post a Comment