மா தயவே தேவ தயவே

மா தயவே தேவ தயவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மா தயவே தேவ தயவே

                        மானிலத்தில் தேவை எனக்கே

 

1.         வாக்களித்த வானபரன்

            வாக்கு மாறார் நம்பிடுவேன்

            நம்பினோரைக் கைவிடாரே

            நற் பாதமே சரணடைந்தேன்

 

2.         இயேசுவின் பொன் நாமத்தினால்

            ஏதென்கிலும் கேட்டிடினும்

            தம் சித்தம் போல் தந்திடுவார்

            தந்தையவர் எந்தனுக்கே

 

3.         சத்துருக்கள் தூசித்தாலும்

            சக்தியீந்தென் பட்சம் நிற்பார்

            ஆதரவே அளித்திடுவார்

            ஆறுதலாய் வாழ்ந்திடுவேன் - மா

 

4.         என்னில் ஏதும் பெலனில்லையே

            எந்தனுக்காய் இராப் பகலாய்

            நீதியுள்ள நேசர் இயேசு

            நிச்சயமாய் பரிந்துரைப்பார் - மா

 

5.         தாய் வயிற்றில் இருந்தது முதல்

            தமக்காய் என்னைத் தெரிந்தெடுத்தார்

            என் அழைப்பும் நிறைவே

            எப்படியும் கிருபை செய்வார் - மா

 

6.         தம் வருகை தரணியிலே

            தாமதமாய்க் கடந்தடினும்

            சார்ந்தவரை அனுதினமும்

            சோர்ந்திடாமல் ஜெபித்திடுவேன் - மா

 

 

YouTube Link

YouTube Link

பாடலை கேட்க இங்கே சொடுக்குங்கள்...

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே