மாரநாதா இயேசு நாதா
மாரநாதா இயேசு நாதா
சீக்கிரம்
வாரும் ஐயா
வாரும்
நாதா இயேசு நாதா
(2)
1. மன்னவன்
உம்மைக் கண்டு
மறுரூபம் ஆகணுமே
விண்ணவர்
கூட்டத்தோடு எந்நாளும்
பாடணுமே
2. குடிவெறி
களியாட்டம் அடியோடு
அகற்றிவிட்டேன்
சண்டைகள்
பொறாமைகள்
என்றோ வெறுத்து
விட்டேன் - நான்
3. பெருமைபாராட்டுகள்
ஒருநாளும் வேண்டாம்
ஐயா
சிற்றின்பம்
பணமயக்கம்
சிறிதளவும் வேண்டாம்
ஐயா
4. நியமித்த
ஓட்டத்திலே
நித்தம் நான் ஓடிடுவேன்
நித்திய
கிரீடம்தனை
நிச்சயமாய்ப்
பெற்றுக்கொள்வேன்
5. ஆவியில்
நிரம்பிடுவேன்
அயராது ஜெபித்திடுவேன்
அப்பாவின்
சுவிசேஷம் எப்போதும்
முழங்கிடுவேன்
6. உம்முகம் பார்க்கணுமே
உம் அருகில் இருக்கணுமே
உம்பாதம் அமரணுமே உம்குரல் கேட்கணுமே
- பெர்க்மான்ஸ்
Comments
Post a Comment