முடிவில்லாத பேரன்பே தீராத இரக்கமே
முடிவில்லாத
பேரன்பே தீராத
இரக்கமே
காலை
தோறும் புதிதாய்
இருக்கும்
கிருபைக்காய்
நன்றி நன்றி
1. உமது
அன்பால் எமது குறையை
பொறுத்து
கொள்பவரே
நிறை
அன்பாலே என் அச்சம்
அகற்றி
ஆறுதல்
தருபவரே
2. நொடிப்பொழுதே
கைவிட்டாலும்
இரக்கத்தாலே
மீட்பவரே
உறவை
வளர்க்கும் அன்பை
பொழிந்து
நண்பர்கள்
ஆக்குகிறீர்
3. உயிரை
தந்து அன்பை காட்டி
எனக்காய்
பலியானீர்
அன்பே
உங்கள் வாழ்வின்
அடித்தளம்
ஆணிவேராகட்டும்
4. அன்பு
கயிற்றால் பாசம்
காட்டி
ஈர்த்து
கொள்பவரே
நிலை
சாயாத அன்பே
காட்டி
எம்மில்
வாழ்பவரே
5. உமது
பெயரால் நாங்கள்
காட்டும்
அன்பும்
உழைப்பையும்
மறக்காதவர்
நன்மையான
அன்பு பணியில்
ஆவியானவர்
துணையுள்ளார்
Comments
Post a Comment