மின்னாள் சீக்கிரம் வரச் சொன்னாள்
120. இராகம்:
ஆனந்தபைரவி சாப்புதாளம்
பல்லவி
மின்னாள்[1] சீக்கிரம்
வரச் சொன்னாள்,
வரச் சொன்னாள்.
அனுபல்லவி
மன்னா,
ஏசுகிறிஸ்து
மகராஜா, ஓசன்னா!
- மின்
சரணங்கள்
1. உமது சபையாம் மனையாட்டி-உம
துருக்கத்தினால்
உம்மில் அன்பு
பாராட்டி - மின்
2. சீயோன்
மகள் காதல் மிஞ்சி;
உமைச்
சீக்கிரம்
வரச் சொன்னாள்,
மெத்தவும் கெஞ்சி;
- மின்
3. எருசலேம்
மகள் உமைத்
தேடி-மன
தேங்கி,
ஏங்கி, மதி முகம்
மிக வாடி - மின்
4. ஆவி நீர்
கொடுத்த அச்சாரம்-மேவி
அப்பா,
பிதாவே, என்று
அழைக்கச் செய்தீர்
ஆம் - மின்
5. திருடன்போல்
வருவேன் என்றீர்
ஆம்-தினம்
ஜெபம்பண்ணி,
விழித்துக்காத்திருக்கச்
சொன்னீர் ஆம்
- மின்
6. தேவரீருடன்
ஒன்றாய்க்கூடி-நித்ய
ஜீவனை அடைந்திட
மிகவும் மன்றாடி
- மின்
7. ஏழை அடியாள்
பாவம் தீரும்;-உம
தின்பத்
திருச்சபையின்
மகிமையில் சேரும்
- மின்
- மரியான்
உபதேசியார்
Comments
Post a Comment