மாபெரும் செயல்கள் புரிந்தார்
1. மாபெரும்
செயல்கள் புரிந்தார்
- நம்
வாழ்வினில்
நலன்கள் பொழிந்தார்
நாவினால்
இயேசுவைத் துதிப்போம்
- எந்
நாளுமே
மகிழ்ந்து களிப்போம்
பல்லவி
பெரியவர்
- மாபெரியவர்
- இயேசு
அரியவர் - நமக்குரியவர்
உலகினில்
இருப்பவர் எவரிலும்
- கொடும்
அலகையாம்
அழிம்பன்
படையிலும் - பெரியவர்
மா - பெரியவர்
2. பாருளோர் பலரும்
வியந்தே - அவர்
பேரினைப்
புகழும் படியே
சீர்மீகும்
விடுதலை ஈந்தார்
- நம்
பேரினில்
திருவருள் கூர்ந்தார்
- பெரியவர்
3. கவலையாய்
வயலை அடைந்தே
- கண்
கலங்கியே
விதைகள் விதைப்போர்
களிப்புடன்
அறுவடை செய்வார்
- அரிக்
கட்டுகள்
சுமந்துமே செல்வார்
- பெரியவர்
- தி. தயானந்தன்
பிரான்சிஸ்
Comments
Post a Comment