மாட்டுத் தொழுவத்தில் மன்னன் பிறந்தீரய்யா

மாட்டுத் தொழுவத்தில் மன்னன் பிறந்தீரய்யா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

இராகம்: “அநாதி சிநேகத்தால் என்னை”

 

          மாட்டுத் தொழுவத்தில்

            மன்னன் பிறந்தீரய்யா

            மா மகிழ்ச்சியால்

            எம்மை நிறைத்து விட்டீரே

 

                        உங்க பிறப்பு அதிசயம்

                        உங்க செயலும் அதிசயம்

                        நாங்க சுகித்து வாழவே

                        நீங்க உலகில் வந்தீங்க

 

1.         ராஜமேன்மையைத் துறந்து

            ஏழைக்கோலத்தில்

            கன்னி மரியின் மடியில் வந்து

            தவழ்ந்தீரையா - உங்க

 

2.         இருளில் நடக்கும் ஜனங்களுக்கு

            ஒளியாய் வந்தீரே

            பாவசாப கட்டுகளை

            முறித்தீரையா - உங்க

 

3.         கிழக்கிலிருந்து சாஸ்திரிகள்

            விரைந்து வந்தனர்

            காணிக்கையைக் கொண்டு வந்து

            களிப்பாய் வாழ்த்தினர்

 

4.         நட்சத்திரம் வானத்திலே

            வழிகாட்டவே

            நடந்து வந்த ஞானிகளும்

            நன்றி கூறினர் - உங்க

 

Evt. A. லிவிங்ஸ்டன் சில்வா - ஆவரந்தலை

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே