மாரிக் காலம் சென்றது மழை பெய்து ஓய்ந்தது

மாரிக் காலம் சென்றது மழை பெய்து ஓய்ந்தது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மாரிக் காலம் சென்றது மழை பெய்து ஓய்ந்தது

            நேசர் வருகிறார் என் நேசர் வருகிறார் (2)

 

                        வசந்த காலம் வந்தது

                        என் நேசரின் வருகையால்

                        ஆடிப் பாடி மகிழுவேன்

                        என் நேசரோடு சேருவேன்

 

1.         பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குது

            காட்டுக் குருவி பாடல் பாடும் காலம் வந்தது

            நேசரின் வாசனையை

            நான் அறியும் வேளையிலே

            என் வாழ்வில் வசந்த காலம் ஓடி வந்தது

 

2.         அத்தி மரம் பூப்பூத்து காய் காய்த்தது

            திராட்சைக் கொடி வாசனையால்

            தேசம் நிறைந்தது (2)

            நேசரின் நடைகளை

            நான் அறியும் வேளையிலே

            என் வாழ்வில் வசந்தகாலம் ஓடி வந்தது

 

3.         கன்மலையின் வெடிப்புகளில்

            சத்தம் கேட்குது

            கானம் பாடும் பறவைகளின் குரல் கேட்குது

            நேசரின் குரலதனை

            நான் அறியும் வேளையிலே

            என் வாழ்வில் வசந்த காலம் ஓடி வந்தது

 

4.         வெள்ளைப் போள வாசனையால்

            தோட்டம் நிறையுது

            கந்தவர்க்க தூபத்தினால் மனம் மகிழுது

            நேசரின் கரங்களை

            பற்றிக் கொள்ளும் வேளையிலே

            என் வாழ்வில் வசந்த காலம் ஓடி வந்தது - மாரிக்காலம்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே