முத்தமிடுவாரென் இயேசுவே

முத்தமிடுவாரென் இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          முத்தமிடுவாரென் இயேசுவே

            அள்ளி அணைப்பார் என் நேசரே - 2

 

                        பிரியமே மதுரமே ஆசையே என் இயேசுவே

 

1.         தலையோ தங்கமயம்

            தலை முடியோ கரு மேகம் - 2

            கண்கள் புறா கண்கள்,

            முற்றிலும் அழகுள்ளவர் - 2

            இவரே என் நேசர் சாரோனின் ரோஜா

            பள்ளத்தாக்கின் லீலி சிறந்தவர் இவர் அல்லவோ - 2 - பிரியமே

 

2.         இதயத்தின் முத்திரையே

            என் நேசத்தின் அக்கினியே - 2

            பாசத்தின் பெரு மழையே

            பூரண அழகுள்ளவர் - 2

            ஆத்தும நேசரே கவர்ந்திடும் வாசனையே

            கன்மலை கலைமானே பாடுவேன் உமை நானே - 2 - பிரியமே

 

 

- Rev. S. Godwin

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே