மனவாதை அடைந்த கனபாதகன் வஞ்சம்
243.
இராகம்: ஆனந்தபைரவி அடதாளசாப்பு
(445)
பல்லவி
மன வாதை[1]
அடைந்த கனபாதகன்
வஞ்சம்
அறவே கிருபை
கூர், ஐயா,
அனுபல்லவி
ஜனவானவர் சங்கம்
அனைவோரும்
வணங்கும்
தவிராஜ[2] சுதந்தரா, திவ்ய ஏசு
நாதேந்திரா
- மன
சரணங்கள்
1. பாவிக்குந்தன்மேல்
விசுவாசமே-திருப்
பாதம்
துணை தரும் விலாசமே,
ஜீவனே,
நீர் எனக்கதி
நேசமே;-தேவரீர்
சித்தத்தின்படி
நடக்கச் செய்யும்,
ப்ரகாசமே
- மன
2. கடி[3]யும் கொடுமையாகச்
சீறுதே; மாய
கலக
உலகும் பழி கூறுதே;
சடமும்[4] திடம்
இல்லாமல் மாறுதே;-மிகத்
தயங்கி, மனதெல்லாம்
வே[5] சாறுதே, சுவாமி
- மன
3. நியாயப் பிரமாணம்
குற்றம் சாட்டுதே;
என்றன்
நடக்கை
எலாம் பொல்லாப்பில்
மட்டுதே
மாயப்
பிரபஞ்சம்
இச்சை காட்டுதே,
பாவ
வழியில்
என்னை இழுத்
தாட்டுதே,
சுவாமி - மன
4. கங்குல்
பகலும் கண்ணீர்
ஓட்டுமே;-நித்தம்
கவலை
பிடித்தென்
முகம் வாட்டமே;
எங்கே
பார்த்தாலும்
மா போராட்டமே;-கெட்ட
ஏழைக்குன்
பதத்தில்
மன்றாட்டமே,
சுவாமி - மன
- வேதநாயகம்
சாஸ்திரியார்
Comments
Post a Comment