மா துன்ப மே அடைந்தோர் மறு லோக

மா துன்ப மே அடைந்தோர் மறு லோக

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

99. இராகம்: பைரவி.                                                                                                                தாளம்: ஆதி.

 

                                                                        சகல பரிசுத்தவான்களின் திருநாள் - நவம்பர் முதல் நாள்

 

                             “ஆ! இன்ப காலமல்லோ” - என்ற மெட்டு

 

                             பல்லவி

 

                   மா துன்ப மே அடைந்தோர் - மறு லோக

                   வாழ் வின்ப மே அடைந்தார்

 

                             அனுபல்லவி

 

            பூவின்ப மேன்மையைப் போக்கும்து ரிச்சையை

            பொன்னுலக வாஞ்சை தன்னில் மனம் வையும் - மா துன்ப

 

                             சரணங்கள்

 

1.         பரிசுத்த வான்கள் அதோ - பரலோக

            வாசிகள் நாங்க ளென்றே

            தரிசித்து இயேசுவையே - வணங்குகிறார்

            சாஷ்டாங்கம் தொண்டனிட்டு

            கரிசனை யோடே நாம் கடவுளைத் துதிப்போமே

            வரிசையுடன் நின்று வாழ்த்துங் கவிபாடி - மா துன்ப

 

2.         முத்திரை போடப் பட்டோர் - நெற்றிதனில்

            முகருந் தரிக்கப் பட்டோர்

            நித்திய காலமதாய் - பரமனின்

            நீடூழி இராச்சியத்தில்

            பக்தியு டன்வளர் பாங்குசிங் காசனம்

            சுற்றிலும் நின்றுபி தாவைத் தொழுகிறார் - மா துன்ப

 

3.         சகலப ரிசுத்தரும் - திருவுள்ள

            சாட்சிய ளித்தவரும்

            பகலும் இரவு மில்லா - மோட்சமதில்

            பாடுறார் சங்கங் கூடி

            எண்ணுக்க டங்கிடா ஏகப்பெ ருங் கூட்டம்

            எல்லாம் தரித்தது வெள்ளையங் கிமட்டும் - மா துன்ப

 

4.         மரித்தோர் உயிர்த்தோரும் - மானிலத்தில்

            மாளா திருப்போம்

            சிறுத்தோர் பெருத்தோரும் - சீமைகளில்

            செந்தமிழ் கற்றோரும்

            நாலா சாதி பாடை நாற்றிசை மாந்தரும்

            நாதன் திருச்சபை ஐக்கிய மாகிறார் - மா துன்ப

 

5.         விசுவாசம், சாந்தம், அன்பு - வைராக்கியம்

            வேண்டும் பொறுமை, உண்மை

            சகோதர சிநேகம், கற்பு - கபடில்லாத

            தாழ்மை, ஆவி யெளிமை

            இருதய சுத்தமோ டெங்கும் சுவிசேடம்

            எடுத்துச் சத்ய சாட்சி கொடுத்து உயிர் விட்டு - மா துன்ப

 

6.         மேன்மை உயிர்த்தெழுதல் - அடைந்திட

            மிகவும் வாதிக்க்பபட் டார்

            பூமி வெடிப்பில் னுள்ளும் - மலைக் குகைப்

            பொந்து புடைகட் குள்ளும்

            நிந்தைய டிபட்டுக் காவல் கல் லெறிபட்டு

            மந்தை மந்தையாக வாளால றுப்புண்டு - மா துன்ப

 

7.         வெள்ளாட்டுத் தோல்களையும் - வெருண்ட

            செம்மறித் தோல்களையும்

            கள்ளந டிகரைப் போல் - போர்த்துக்

            கடி பட்டார் நாங்களாலே

            எண்ணெய்க் கொப்பரை காய்ச்சி, இரு பக்கம் பொரிபட்டு

            வண்ணமே னிகளை வழித்திடக் கொடுத்திட்டு - மா துன்ப

 

8.         தெரிந்து கொள்ளப் பட்டோரே - கிருபையாய்த்

            தேவாட்டுக் குட்டி இரத்தம்

            மருந் தென்னும் நற்கருணை - சமயமாம்

            வாங்குவீர் பிர சாதம்

            கிறிஸ்துவின் ஞான சரீரத்தின் ஐக்கியம்

            கிடைத்திட மேன் மேலும், கெஞ்சுங்கள், கெஞ்சுங்கள் - மா துன்ப

 

9.         நானா வித வாசம் - பொருந்திய

            நற்கந்த புட் பங்களை

            கானாவூ ரிலொருவன் - சேர்த்துக் கட்டி

            காட்டும் பூச் செண்டது போல்

            மேனாள் திருச் சபை, மேம்படு பக்தரை

            ஞானமு டன் கூட்டி, நம் கையில் தந்தனர் - மா துன்ப

 

- S. உவால்டர் கவிராயர், தென்மலை.

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே