மீட்பர் இயேசுவே கோரச்

மீட்பர் இயேசுவே கோரச்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                             பல்லவி

 

          மீட்பர் இயேசுவே - கோரச்

            சிலுவை மீதினிலே

            குருசில் மரித்தாரே

            காயங்கள் அடைந்தே - மீட்பர்

 

                             சரணங்கள்

 

1.         கால்கள் கைகளிலே

            ஆணிகள் அறைந்தனரே

            முட் கிரீடம் சூடியே மூன்றாணி மீதிலே

            கர்த்தர் இயேசு தொங்கினார் - மீட்பர்

 

2.         கள்ளர் மத்தியிலே

            கள்ளன் போல் தொங்கினாரே

            இத்தனை பாடுகள் உந்தனின் வாழ்வுக்காய்

            சொந்தமாய் ஏற்றுக்கொண்டார் - மீட்பர்

 

3.         இரத்த வெள்ளத்திலே

            அன்பின் வெள்ளம் பாய்ந்திடுதே

            அலைந்து திரிந்திடும் ஆடுகட்காகவே

            நல் மேய்ப்பர் பலியானார் - மீட்பர்

 

4.         பாவ சாபங்களும்

            தீரா ரோகங்கள் அனைத்தும்

            சுமந்தார் சிலுவையில் தம் சரீரமதிலே

            இன்றே சுகமடைவாய் - மீட்பர்

 

5.         பேரின்ப வாழ்வதனை

            பெற்று நீயும் ஆனந்திக்க

            நேசர் இயேசுவை இன்றே நம்பி வந்திடுவாயே

            பாசமாய் ஏற்றுக்கொள்வார் - மீட்பர்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே