ஒன்றாய் ஒருமனமாய் வாழ்ந்திடுவோம் நாம்
ஒன்றாய்
ஒருமனமாய் வாழ்ந்திடுவோம்
நாம்
ஒன்றாய்
ஒரு அவையாய்
வளர்ந்திடுவோம்
நாம்
அன்பெனும்
அணியுடன் அருட்பணி
செய்யவே
அன்புடன்
ஆண்டவர் அழைக்கின்றார்
நம்மையே
ஒன்றாய்
இணைவோம் ஒன்றாய்
வளர்வோம்
ஒருமனமாய்
ஓருடலாய் ஒரே அவை
யாவோம் - (2)
1. பிரிவினை
சுவரை நாம் உடைத்து
எறிவோமே
பிறரையும்
அன்பினால் அனணத்துக்
கொள்வோமே
எதிரியை
இயேசு போல் நேசிக்க
பழகிடுவோம்
எல்லோரும்
ஒன்றாய் வாழ இன்றே
உழைத்திடுவோம்
- ஒன்றாய் இணைவோம்
2. கோட்பாடுகள்
பலவற்றால் பிரிந்து
கிடக்கின்றோம்
ஜாதி
மத இன வேற்றுமையால்
பகைமை வளர்க்கின்றோம்
இயேசு
சொன்ன அன்பின்
வழியை ஏன் மறந்தோம்
நாம்
எல்லோரும்
இறை மக்கள் என்று
உணர்ந்திடுவோம்
- ஒன்றாய் இணைவோம்
3. படைப்புகள்
அனைத்தையும் பேணி
காத்திடுவோம்
படைத்தவர்
பாரத்தை நிறைவேற்றிடுவோம்
தலைமுறைகள்
வாழும் இடமாய்
பூமி மாறச் செய்வோம்
படைப்புடன்
இசைந்து வாழ்ந்து
பரனை போற்றிடுவோம்
- ஒன்றாய் ஒருமனமாய்
- Rev. Y. Sujin Raj
PDF பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment