08 October 2025

மா பாவி நான் மா பாவி நான்

மா பாவி நான் மா பாவி நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மா பாவி நான் மா பாவி நான்

                        மா பெரும் துரோகி பாவத்தில் மூழ்கி

                        உம் பிரசன்னத்தை இழந்தேன்

                        சகதியில் விழுந்தேன் ஏற்றுக் கொள்ளுவீரா

 

1.         இருள் சூழ்ந்த நிலைமையில் வாழ்கின்றேனே

            பரிசுத்த ஸ்தலத்திற்குள் அழைத்திடுமே

            அழுகின நிலைமையில் வாழ்கின்றேனே

            உயிர்ப்பிக்கும் கரங்களை நீட்டிடுமே

 

                        உம் மன்னிப்பு மாறாது

                        உம் அன்போ குறையாதது

                        உம்கிருபை அளவில்லாதது

                        உம் தயவோ பெரியது ஏற்றுக்கொள்வீரா

 

2.         உம்மை மறந்தேனே நான்

            வாழ்வை இழந்தேனே நான்

            மறுவாழ்வு தந்தென்னை அணைத்திடுமே

            நான் ஏமாற்றி ஏமாந்து பின்மாறினேன்

            உத்தமனாய் என்னை மாற்றிடுமே

 

3.         உம் இரத்தம் கொண்டு மீட்டீரே

            உம் ஆவியால் நிறைத்தீரே

            உம் பிள்ளை என்று அழைத்தீரே

            உம் மார்போடென்னை அணைத்தீரே

            உம்மோடு சேரவே உம்மோடு வாழவே

            ஏற்றுக் கொண்டீரே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...