மாரநாதா என் தெய்வமே

மாரநாதா என் தெய்வமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மாரநாதா என் தெய்வமே

                        அடிமை என்னில் எழுந்து வாரும்

                        கண்ணீரைத் துடைக்க கஷ்டங்கள் மாற்ற

                        கசந்த என் வாழ்வை மதுரமாக்க

                        கொடிய எகிப்தை அகல செய்ய

                        மாரநாதா மாரநாதா

 

1.         ஆபிரகாம் மகனை பலியிட்ட வேளையில்

            முட்செடியில் ஆடாய் வெளிப்பட்டீரே

            என்னையே உமக்கு

            பலியாக்கும் வேளையில்

            என்னிலும் எழுந்து வாரும் ஐயா

 

2.         மார்த்தாளும் மரியாளும்

            கண்ணீர் விட்ட நேரத்தில்

            இயேசுவே நீரும் கண்ணீர் விட்டீரே

            கல்லறை சென்று கல்லையே நீக்கி

            மரித்த லாசரை உயிர்ப்பித்தீரே

 

3.         பவுலும் சீலாவும் துதி செய்த வேளையில்

            சிறையின் கதவுகள் திறந்ததல்லோ

            சங்கிலி அறுந்தது இடமே அதிர்ந்தது

            காவலர் மீட்பை அடைந்தனரே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே