யாருக்கும் பிடிக்காத என்னை
யாருக்கும்
பிடிக்காத என்னை
ஒதுக்கி
வைக்கப்பட்ட என்னை
உமக்கு
ஏன் பிடித்தது?
- என்னை
என்னிடம்
என்ன பிடித்தது?
யாருமே
விரும்பாத என்னை
விரும்பினோரை
விட்டு விடுவார்
என்னை
என்னிடம்
என்ன கண்டீரோ நீர்?
நானும்
வெறுமையானவள்
1. உடைந்த
பாத்திரம் நான்தானையா
ஒன்றுக்கும்
உதவாத இருந்தேன்
ஐயா
என்னை
உன் கண்கள் கண்டதே
கருணையால்
என்னை பார்த்தீரே
தகுதியே
இல்லாத என்னையே
தகுதியாய்
நீர் மாற்றினீரே
- யாருக்கும்
2. அடைக்கலமாக
வந்தீரையா
அனுதின
மன்னாவை தந்தீரையா
என்னை
நடத்தும் உம் வார்த்தைகள்
என்னிடம்
பேசும் உன் வார்த்தைகள்
பேதையாய் இருந்த
என்னையுமே
ஞானியாய் மாற்றிப் பார்க்கின்றீரே
- யாருக்கும்
3. என்றும்
உண்மை உள்ளவரே
பொய்யுறையாத
நல்ல தெய்வமே
என்னை
என்றும் மறவாதவர்
உன்
உள்ளங்கையில்
என்னை வரைந்து
உள்ளீர்
இதுவே
நான் பெற்ற பாக்கியம்
இதுவே
நான் பெற்ற ஸ்லாக்கியம்
- யாருக்கும்
- Fatimary Velmurgan
PDF
பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment