Posts

Showing posts from April, 2019

இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும்

இந்தக் குழந்தையை ஏற்றுக்கொள்ளும் 300. (290) பிலஹரி                                        ரூபகதாளம் பல்லவி            இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே. அனுபல்லவி             உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த-இந்த சரணங்கள் 1.          பிள்ளைகள் எனக் கதிகப் பிரியம், வரலாம், என்று             உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே. - இந்த 2.          பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்த             சீலமாயின்றும் வந்தாசீர்வாதம் செய்யும், ஐயா. - இந்த 3.          உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்,             உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து. - இந்த 4.          உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல்,             நலமாய் இதைக் காத்தாளும், நன்மைப் பராபரனே! - இந்த 5.          விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடங்கிப்,             பசிய மரம்போல் தெய்வ பத்தியிலே வளர. - இந்த - பாக்கியநாதன் தாவீது

ஆ யேசுவே நீர் எங்களை

ஆ யேசுவே காரும் 298. (1 L.) சங்கராபரணம்                                ரூபகதாளம் கண்ணிகள் 1.          ஆ யேசுவே நீர் எங்களை             அன்பாகச் சேர்ந்துமதாவியை             நேயா அருள் அனுக்ரகத்தையும்             நிமலா தந்து காரும். 2.          பரந் தன்னில் நீர் பரிசுத்தர், மா             பரிசுத்தர், மா பரிசுத்தரே,             பரனே சேனைப்பரனே என்று             பகர்ந்தே பார்க்குமளவும். 3.          வாயும் மையே போற்றி எங்கள்             மனம் நின் அன்பை ருசிக்க நற்ச             காயா விசுவாசந் தந்து             காரும் எம்மைப் பாரும். 4.          மூவாட் களாய் ஒரு வஸ்துவாய்             மூலோகமும் ஆளும்பரா             தேவா தந்தை சுதனாவியே             தினமுந்துதி உமக்கே. - ஞா. சாமுவேல்

வந்தருள் இவ்வாலயத்தில் மகிமை

வந்தருள் இவ்வாலயத்தில் 297. (10) புன்னாகவராளி                                 ரூபகதாளம் கண்ணிகள் 1.        வந்தருள், இவ்வாலயத்தில்; மகிமை ஏகோவாவே,-உனை           வாழ்த்தும் அடியார்க்கு நிதம் வாய்த்த பெரு வாழ்வே!             அந்தி பகல் இங்குனை வந்தடையும் அடியார்க் கிரங்கி,             ஆதரவாய் ஆண்டு கொள்வாய், ஆதி பராபரன் குமாரா! 2.          திருக் கருணை மொழியால் மனத் திருக்கறுக்கும், பொருட்டெழுந்து,             தீய வினை மதித் தழிப்பாய், தேவர் பெருமானே!             பெருக்கமுள உன் வசனம் பேதையருக்கே பலிக்க             உருக்கமுடன் இரங்கும், ஐயா, உன் பதமே தஞ்சம் என்றும். 3.          சஞ்சலம் மிஞ்சும் மனதால் சரணம் உனக்கென்று வரும்             தமியர் தமக் காறுதலாய்த் தயை செய், ஆதிசேயா!             செஞ் சொல் மலிந்த புலவர், செப்பு தமிழ்க் குகந்த உன்றன்             சீரடிக்கண் சேர்பவர்க்கே, ஆருயிர் உண்டாவதற்கே. 4.          பூவுலகை ஆளும் மன்னர், போதம் உணர் வேதியர் உன்             பொற் பதத்தை அர்ச்சிக்கவே நற் பதம் தா, தேவே!             மூவுலகிலும் துதியு

சரணம் நம்பினேன் யேசு நாதா

சரணம் நம்பினேன் 296. (9) நாதநாமக்கிரியை                              சாபுதாளம் பல்லவி             சரணம் நம்பினேன் யேசு நாதா-இது அனுபல்லவி              தருணம், தருணம், உன்றன் கருணை கூர், வேதா. - சரணம் சரணங்கள் 1.          நின் அருளால் இங்கே வந்து,-என்றும்             நின் அடைக்கலமாக என்னையே தந்து,             முன் னாள் வினையைத் துறந்து,-ஆதி             மூலமே, உனக் கோலம், ரட்சியும் என்று. - சரணம் 2.          சன்னதி முன் தொண்டன் நின்றே,-என்றும்             தாயான கருணை உனக்கு உண்டென்றே,             சென்னிமேல் கரம் தூக்கி நின்றே, உனைச்             சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே. - சரணம் 3.          அலைவாய்த் [1] துரும்புபோல் ஆடி,-உன             ததி கருணை வரச் செம்பாதந் தேடித்,             தொலையாத வாழ்வை மன்றாடி,-அன்பின்             தோத்ர சங்கீர்த்தன கீதங்கள் பாடி. - சரணம் 4.          இனிய கருணை பொழிவேதா,-எனை             இரு கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா,             கனி வினை நீக்கிய நீதா,-நசரைக்             கர்த்தாதி

தருணம் இதுவே கிருபை கூரும்

தருணம் இதுவே 295. (6) மோகனம்                                            சாபுதாளம் பல்லவி                    தருணம் இதுவே, கிருபை கூரும்,                     விழிபாரும், பதம் தாரும், தாரும். சரணங்கள் 1.          கருணை தெய்வ குமாரா, கன மனுடவதாரா;             அருமை ரட்சக யேசு நாதா,-உல             கனைத்தும் வணங்கும் சத்ய வேதா,-உன்றன்             அடியர்க் கருளும் திருப் பாதா,-சத்ப்ர             சாதா, நீதா! [1] - தருணம் 2.          வானத்திலிருந்து வந்த ஞானத்தொளி சிறந்த             மகிமைப் பிரதாவின் திருப் பாலா,-ஆதி             மைந்தர்க் கிரங்கும் அனுகூலா,-கன             விந்தைக் கருணை மனுவேலா,-மெய்ந்             நூலா, சீலா! - தருணம் 3.          அற்ப உலக வாழ்வில் அலைந்து, நிலை குலைந்து,             அலகைப்படு குழியில் வீழ்ந்து,-தாழ்ந்து,             அஞ்சி அஞ்சி நலிந் தேனே;-அடிமைக்             கஞ்சல் என்றுசொல்லும் கோனே,-சீ             மானே, தானே! - தருணம் 4.          இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த             சொந்தக் கிருப

வாரும் நாம் எல்லோரும் கூடி

நாம் கூடி மகிழ் கொண்டாடுவோம் 293. (4) சங்கராபரணம்                                             ஏகதாளம் பல்லவி                           வாரும் நாம் எல்லோரும் கூடி,                         மகிழ் கொண்டாடுவோம்;-சற்றும்                         மாசிலா நம் யேசு நாதரை                         வாழ்த்திப் பாடுவோம். ஆ! சரணங்கள் 1.          தாரகம் [1] அற்ற ஏழைகள் தழைக்க நாயனா,-இந்தத்             தாரணி யிலே [2] மனுடவ தாரம் ஆயினார். - வாரும் 2.          மா பதவியை இழந்து வறியர் ஆன நாம்,-அங்கே             மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார். - வாரும் 3.          ஞாலமதில் [3] அவர்க்கிணை [4] நண்பர் யாருளர்,-பாரும்             நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார். - வாரும் 4.          மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே,-இந்த             மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் [5] சென்றார். - வாரும் 5.          பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே,-அவர்             பட்சம் வைத் துறும் தொழும்பரை [6] ரட்சை செய்கிறார். - வாரும் - யோ. பால்மர்

சரணம் சரணம் சரணம் எனக்குன்

எனக்குன் தயை புரியும் 292. (2) செஞ்சுருட்டி               ரூபகதாளம் பல்லவி                     சரணம், சரணம், சரணம் எனக்குன்                     தயைபுரியும், என்பரனே. அனுபல்லவி             மரணத்தின் பெலன் அழித்துயிர்த்த என்             மன்னா, ஓ சன்னா! - சரணம்                              சரணங்கள் 1.          தரணிதனில் வந் தவதரித்த தற்             பரனே, எனக்காக-வலு             மரணம் அடைந்தும், உயிர்த்தெழுந்த தென்             மகிமை, நித்திய பெருமை. - சரணம் 2.         சுரர்கள் போற்றும் பரனே, உனக்குத்             துரோகியான எனக்கு-நீயே             இரவு பகல் என் குறைவு நீக்க, உண்             டேது நலம் என்மீது - சரணம் 3.         தப்பின ஆடதற் கொத்த அடியேனைத்             தானே வந்து தேட;-உனக்             கெப்படிச் சித்தம் உண்டானதிவ் வற்பனுக்             கற்புதமாம் முடி சூட. - சரணம் 4.          எவ்வித நன்மைக்குங் காரணனே, உனை             ஏழை அடியேனே-பற்றி             இவ் வுலகத்தில் எவ்வேளையும் போற்றவே             இரங்காய், எனக்

ஓடிவா ஜனமே கிறிஸ்து வண்டைக்

கிறிஸ்துவண்டைக்கு ஓடிவா 291. (18) புன்னாகவராளி                                  ஆதிதாளம் பல்லவி                         ஓடிவா, ஜனமே;-கிறிஸ்து வண்டைக்                         கோடிவா, ஜனமே;-பண்டிகை கொண்                         டாடிவா, ஜனமே;-அவர் பாதத்தைத்                         தேடிவா, ஜனமே. அனுபல்லவி             நீடு சமர் [1] புரி கோடி அலகையை             நிக்ரகித்து [2] வாள் பிடித்த உக்ர மனுவேலனைக் கண்-டு-ஓடி சரணங்கள் 1.          நேர்ந்தடிகள் துதித்து,-நித்ய ஜெபத்தில்             நீதித் தவங்கள் கதித்து,             சேர்ந்தருளை மதித்து,-சோதிக்கச் செய்த             தீய சர்ப்பத்தை மிதித்து,-அநித்தியமான             ஜெக ஜாலத்தைப் பணித்து, அகத் தாக்ரமத்தை விட்டு,             திட்டமாக நின்று, பத்துக் கற்பனைப் படியே சென்று,             தேவ துந்துமி முழங்க,-சங் கீதங்களும்,             பா வினங்களும் விளங்க,-அதன் ஒலியால்             அண்டமும் குலுங்க, பர மண்டலங்களும் இலங்க,             ஆராதனைகள் செய்து, சீராய் நடந்துகொண்டு,             அரிய

சிந்தையுடன் தெய்வாலயந்தனில்

சிந்தனையுடன் தேவாலயந்தனில் சேர்வோம் 290. சஹானா                                                ஆதிதாளம் பல்லவி            சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம்,-திரி           யேகரின் திருத்தாள் [1] போற்றியே களிகூர்வோம். அனுபல்லவி 1.          தெய்வநிறையுள்ள யேசு சீர்தெய்வாலயம்;-அவர்             செற்றலர் [2] இடித்துமே சிறந்தவாலயம்;-தமின்             மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம் - சிந் 2.          கர்த்தனைப்பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம்;-எந்தக்             காலமும் துதிமுழங்கும் கான [3] வாலயம்;-பரி             சுத்தமாய்த்தனையே காக்கும் துங்க [4] வாலயம் - சிந் 3.          திவ்யபக்தர் கூட்டமே சிங்காரவாலயம்;-அது             தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யுமலாயம்;-தீட்             டவ்வியம் பகைவிலக்கும் அன்பினாலயம். - சிந் 4.          வானமே தேவாட்டுக்குட்டி வாழுமாலயம்;-பக்தர்             மகிமை ஜோதிமய மாகுமாலயம்;-மெய்ஞ்             ஞானபாக்கியங்கள் பெய்யும் நாதராலாயம். - சிந் ­- ஞா. சாமுவேல் [1] திருப்பாதங்கள் [2] பகைவர

ஆலயம்போய்த் தொழவா ருமென்ற

ஆலயம் போய்த் தொழ வாரும் 289. ஆனந்தபைரவி                                       ஆதிதாளம் பல்லவி              ஆலயம்போய்த் தொழவா ருமென்ற தொனி              ஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில், அனுபல்லவி              ஆலயந்தொழுவது சாலவும் [1] நன்றென             ஆன்றோருரை [2] நெறி சான்ற வர்க்கானதே,             ஆவலாயதிகாலையும் பகல் மாலையுந் திருநாளிலும்பரன் - ஆலயம் சரணங்கள் 1.          பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்             பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும்;             முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணை             முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு [3]             மோட்ச மாநகர் காட்சியால் இக சாட்சியாம் பரன்                         மாட்சி காணவே. - ஆலயம் 2.          பூர்வமுதல் தொழும்பர் போந்தாலயந் [4] தொழுதார்             புனித சுதனும் நமக்கினு முன் மாதிரி தந்தார்;             ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார்;             ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார்;             ஆதலாலினி யாரிலுங்குறை யோதிடாதென துள்ளமே