08 June 2018

மங்களங்கள் பாடிடுவோம் சங்கீத


318. இராகம் (நேசமணி வாசமணி)                                                         (300)

பல்லவி

          மங்களங்கள் பாடிடுவோம் சங்கீத தியானத்தோடு
          இங்கிதமாயிங்கு கூடி சங்கை திரியேகர்க்கு

1.         அண்ட சராசரங்களெல்லாம் எண்ணமுடனே வகுத்த
            தொண்டர்களின் நாயகனுக்குத் தொண்டனிட்டுத் தெண்டனிட்டு - மங்களங்கள்

2.         வானலோகத்தை விட்டு ஈனப்பாவியை யிட்டு
            தானமாக உயிரீந்து தீனரெமை மீட்டவர்க்கு    - மங்களங்கள்

3.         சத்திய நெறியிலேற பக்தியில் தினமும் தேற
            புத்தியதை நித்த நித்தம் தந்துவரும் சுத்தாவிக்கு       - மங்களங்கள்

4.         எல்லாம் படைத்தவர்க்கு பொல்லாரை மீட்டவர்க்கு
            நல்வரங்கள் நமக்கீயும் வல்ல பரிசுத்தாவிக்கு               - மங்களங்கள்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...