30 June 2018

இயேசுவை வாழ்க்கையில் காட்டுங்களே


1.       இயேசுவை வாழ்க்கையில் காட்டுங்களே
            பேச்சில் அல்ல செயலில் நல்ல
            இயேசுவை வாழ்வோராய் காட்டுங்களே

2.         ஆலயம் அருளுரைப் போதாதே
            ஆசரிப்பும் இனிப் போதாதே
            ஆண்டவர் தொழுத்தின் வெளியிலுள்ளோர்
            ஆடுகள் தேடியே ஆவல் கொண்டே                  - இயேசுவை

3.         பரவச மொழிவரம் போதாதே
            கரகோஷ ஆட்டமும் போதாதே
            பரமனின் திருவுளம் அமர்ந்தறிந்தே
            பரிசுத்த ஆவியைச் சுமந்து கொண்டே             - இயேசுவை

4.         வாய்ச் சொல்லில் நேசித்தல் மா எளிதாம்
            வாய்மோ செயலுள்ளோர் நல் அன்பராம்
            உன்னதர் இயேசுவின் அரசுயர
            ஒளி உப்பாய் உலகினில் இலங்கிடுவோம்          - இயேசுவை

1 comment:

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...