30 June 2018

எந்தன் நாவில் புதுப்பாட்டு


பல்லவி

                   எந்தன் நாவில் புதுப்பாட்டு
                        எந்தன் இயேசு தருகிறார் (2)

அனுபல்லவி

            ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
            உயிருள்ள நாள் வரையில் (2)                          - எந்தன்

சரணங்கள்

1.         பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
            தேவனவர் தீபமாம் என்னைத் தேற்றினார்                     - ஆனந்தம்

2.         வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
            பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார்          - ஆனந்தம்

3.         சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
            நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார்            - ஆனந்தம்

4.         தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
            நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன்       - ஆனந்தம்

5.         இவ்வுலக பாடு என்னை என்ன செய்திடும்
            அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன்              - ஆனந்தம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...