30 June 2018

தினம் தினம் இயேசு நாயகனை


          தினம் தினம் இயேசு நாயகனை
            மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன்!
            ஆனந்தமாக என் நேசர் மார்பில்
            அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன்!                  - தினம்

1.         கருவில் என்னைத் தெரிந்து கொண்டு
            கருத்தாய் அவரை பாட வைத்தார்                   - ஆனந்தமாக

2.         வலையை எனக்காய் சாத்தான் விரிக்க
            வழியை மாற்றி அழைத்துச் சென்றார்               - ஆனந்தமாக

3.         தேவன் தன்னை விலையாய்த் தந்தே
            பாவி என்னை மந்தை சேர்த்தார்                      - ஆனந்தமாக

4.         மன்னவன் இயேசு என்னுள் இருக்க
            மனிதன் எனக்கு என்ன செய்வான்                     - ஆனந்தமாக

5.         அல்லல் நீக்கி மார்பில் அணைத்தார்
            அல்லேலூயா பாடுகிறேன்                                  - ஆனந்தமாக

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...