30 June 2018

அன்பே மாறிடா திரு அன்பே

கன்:340

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

பல்லவி

 

                   அன்பே மாறிடா திரு அன்பே         - என்னைத்

                        தாங்கிடும் தேவன்பே

 

1.         மாளும் வேளை எனையும் தேடின அன்பே

            மயங்கிய அன்பே, அணைத்த பேரன்பே

            செலுத்துவேன் துதியுமக்கே                  - மாறிடா

 

2.         பாதுகாத்தீர் அரசே, இது வரையெனையும்

            பயங்கர துன்பம் பல்கி வந்தாலும்

            தாங்கினீர் அன்பினாலே                       - மாறிடா

 

3.         சோரும் போதும் எனக்கும் திருமுகங்காட்டி

            சொல் தவறாது சொந்தம் பாராட்டி

            ஜொலித்திட ஜெயமளித்தீர்                   - மாறிடா

 

4.         ஆழம் நீளம் உயரம் அன்பதின் அகலம்

            அறிந்திடற்காயோ அழைத்தீரென் அன்பே

            ஆச்சரியமே களிப்பேன்                         - மாறிடா

 

5.         பொங்குதே யென்னி தயம் புது ரசத்தாலே

            போற்றுவேன் நாதா யாதொன்று மியலேன்

            தோத்திரம், தோத்திரமே                      - மாறிடா        

 

 

 

 

6.         வானம் பூமியகலும் அன்பது நிலைக்கும்

            வார்த்தையினாலே வரைந்திடலாமோ

            வானவர் அன்பதயே                  - மாறிடா

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...