30 June 2018

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது


பல்லவி

          கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
            கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
            திரண்ட தண்ணீர் மேல் ஜலப் பிரவாகம் மேல்
            தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!

சரணங்கள்

1.         பலவான்களின் புத்திரரே
            பரிசுத்த அலங்காரமாய்
            கனம், வல்லமை, மகிமை
            கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
            பிதா, குமாரன் பரிசுத்தாவியின்
            புதிய ஆசீர்வாதம் பெருக                     - கர்த்தரின்

2.         கேதுரு மரங்களையும்
            லீபனோனின் மரங்களையும்
            கர்த்தரின் வலிய சத்தம்
            கோரமாக முறிக்கின்றது
            சேனை அதிபன் நமது முன்னிலை
            ஜெய வீரனாகச் செல்கின்றார்                 - கர்த்தரின்

3.         அக்கினி ஜுவாலைகளை
            அவர் சத்தம் பிளக்கின்றது
            காதேஸ் வனாந்திரத்தை
            கர்த்தர் சத்தம் அதிரப்பண்ணும்
            ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
            ராஜரீக மெங்கும் ஜொலிக்கும்               - கர்த்தரின்

4.         பெண் மான்கள் ஈனும்படி
            பெலத்த கிரியை செய்திடும்
            காட்டையும் வெளியாக்கும்
            கர்த்தரின் வலிய சத்தம்
            பெலன் கொடுத்து சமாதானமீந்து
            பரன் எம்மை ஆசீர்வதிப்பார்                 - கர்த்தரின்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...