மோட்ச யாத்திரை செல்கின்றோம்
1. மோட்ச யாத்திரை செல்கின்றோம் மேலோகவாசிகள்
- இம்
மாய
லோகம் தாண்டியே எம் வீடு தோன்றுதே
கடந்து
செல்கின்றோம் கரையின் ஓரமே
காத்திருந்த
ராஜ்ஜியம் கண்டடைவோம்
பல்லவி
ஆனந்தமே
ஆ ஆனந்தமே
ஆண்டவருடன்
நாம் என்றும் ஆளுவோம்
ஆதி
முற்பிதாக்களோடு தூதருமாய்
ஆர்ப்பரிப்புடன்
கூடி வாழுவோம்
2. சத்திய
சுவிசேஷம் எடுத்துரைத்துமே - தம்
நித்திய
இராஜ்ஜியம் மக்களை ஆயத்தமாக்கவே
தேசமெங்குமே
அலைந்து செல்கிறோம்
நேசர்
இயேசு வாக்குரைகள் நம்பியே -
ஆனந்தமே
3. அள்ளித்
தூவிடும்விதை சுமந்து செல்கின்றோம் தம்
அண்ணல்
இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே
கண்ணீர்
யாவுமே கடைசி நாளிலே
கர்த்தரே
துடைத்து எம்மைத் தேற்றுவார் -
ஆனந்தமே
4. கர்த்தர்
எம் அடைக்கலம் கவலை இல்லையே - இக்
கட்டு
துன்ப நேரமோ கலக்கமில்லையே
கஷ்டம்
நீக்குவார் கவலை போக்குவார்
கைவிடாமல்
நித்தமும் நடத்துவார் -
ஆனந்தமே
Comments
Post a Comment