மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை


1.       மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை என் சொல்வேன் - அந்த
            மங்களம் சேர் மாளிகைக்குள் என்று சேருவேன்

2.         பட்டணத்து வீதியெல்லாம் சுத்தப் பொன்னாமே - அங்கு
            பாடுவோரும் ஆடுவோரும் கோடாக் கோடியே

3.         முத்து மயமாயிலங்கும் பட்டணமது நமது
            முன்னோரெல்லாம் போயிருக்கும் பட்டணமது

4.         ஜீவநதி பாயுகின்ற பட்டணமது - நிதம்
            சித்திரமுடனிலங்கும் பட்டணமது

5.         நாமெல்லோரும் நாடுகின்ற பட்டணமது - நமது
            நாதரேசு வீற்றிருக்கும் பட்டணமது

6.         சாவு துக்கமேயில்லாத பட்டணமது - நிதம்
            சங்கீதமுடனிலங்கும் பட்டணமது

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு