30 June 2018

அழகான அத்திமரம்

அழகான அத்திமரம் பசுமையான

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          1.       அழகான அத்திமரம்

                        பசுமையான அத்திமரம்

                        பசியோடு இயேசு வந்தாரே

                        கனி தேடி அருகில் வந்தாரே - 2

 

                                    கனி ஒன்றுமில்லை பயன் ஏதுமில்லை - (2)

                                    அழகான அத்திமரம் காய்ந்து போனதே - (2)

 

            2.         பொலிவுள்ள பழத்தோட்டம்

                        வேலியுள்ள கனித்தோட்டம்

                        கோபுரமும் ஆலை அமைத்தவர்

                        ஆவலுடன் அருகில் வந்தாரே - 2

 

                                    கனிகள் தந்தது கசப்பான கனிகள் - (2)

                                    தேவன் தந்த பாதுகாப்பை இழந்து போயிற்றே - (2) - அழகான

 

            3.         கனி தேடி வந்து விட்டார்

                        உந்தன் அருகில் வந்துவிட்டார்

                        இயேசுவை நீ ஏமாற்றிடாதே

                        அருமையான கனிகள் தந்திடு - 2

 

                                    ஆவியின் கனிகள் அனைத்துமே தந்து - (2)

                                    ஆண்டவரின் ஆசியை பெற்று மகிழ்ந்திடு - (2) - அழகான

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...