கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே
பல்லவி
கர்த்தருக்குள்
மகிழ்ந்திருப்பதே
பக்தர்களின் பெலனே
அனுபல்லவி
இன்பங்கொள்வோம் அன்பர்களே
துன்பங்களின் முன்னே
சரணங்கள்
1. நீர்ப்பாய்ச்சலான தோட்டமாவோம்
வற்றா நீர் ஊற்றைப் போலிருப்போம் - இன்பம்
2. நாமங்கள் பரலோகத்திலே
எழுதப்பட்டிருப்பதாலே - இன்பம்
3. தேவ சமுகத்தில் ஆனந்தமாம்
வலப்பக்கம் நித்திய பேரின்பம் - இன்பம்
4. கர்த்தரிடம் நாம் மகிழ்ந்திருப்போம்
வேண்டுதலை அவர் அருள் செய்வார் - இன்பம்
5. தேவ சித்தமதைச் செய்திடுவோம்
தேவ பெலனைத் தினம் பெற்றிடுவோம் - இன்பம்
6. குறைகள் யாவும் ஒழித்திடுவார்
நிறைவாய் சந்தோஷம் அளித்திடுவார் - இன்பம்
7. அவமானத்தை ஆனந்தமாய்
தவறாதனுதினம் சகிப்பவராய் - இன்பம்
Comments
Post a Comment