30 June 2018

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்

                        கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்

                        கைவிடா காத்திடும் பரமனின்

                        கரங்களை நாம் பற்றிக் கொள்வோம்

 

1.         ஜீவ தேவன் பின் செல்லுவோம்

            ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம்

            மனதின் காரிருள் நீங்கிடவே

            மா சமாதானம் தங்கும் - கர்த்தரை

 

2.         உண்மை வழி நடந்திடும்

            உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை

            கண்கள் அவன்மீது வைத்திடுவார்

            கருத்தாய்க் காத்திடுவார் - கர்த்தரை

 

3.         உள்ளமதின் பாரங்களை

            ஊக்கமாய்க் கர்த்தரிடம் சொல்லுவோம்

            இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்

            இயேசு வந்தாதரிப்பார் - கர்த்தரை

 

4.         அன்புமிகு அண்ணலிவர்

            அருமை இயேசுவை நெருங்குவோம்

            தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே

            தாங்கி அணைத்திடுவார் - 2 - கர்த்தரை

 

5.         நீதிமானின் சிரசினின் மேல்

            நித்திய ஆசீர் வந்திறங்குமே

            கிருபை நன்மைகள் தொடருமே

            கேட்பது கிடைக்குமே - 2 - கர்த்தரை

 

6.         இம்மைக்கேற்ற இன்பங்களை

            நம்மை விட்டே முற்றும் அகற்றுவோம்

            மாறாத சந்தோஷம் தேடிடுவோம்

            மறுமை ராஜ்ஜியத்தில் - 2 - கர்த்தரை

 

 

- சாராள் நவரோஜி

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...