உமை நம்பினோர் மாண்டதில்லை
பல்லவி
உமை
நம்பினோர் மாண்டதில்லை
மா்டதில்லை மாண்டதில்லை -
தாசர்
சரணங்கள்
1. துன்பங்கள் பலமாய் நெருங்கி வந்தாலும்
தொல்லைகள் எமை அணுகி வந்தாலும்
காக்க வல்லவர் காக்க வல்லவர் காக்க வல்லவர்
வல்லவர்
2. சிங்கத்தின் குட்டிகள் தாழ்ச்சியுற்றாலும்
பங்கம் வாராதென்னைக் காத்திடுவீரே
ஓங்குமே, பலன் ஓங்குமே, எமைத் தாங்குமே
துயர் நீங்குமே
3. நிறுத்திடு வீரென்னைக் களங்கமில்லாமல்
பொறுத்தெந்தன் குறைகள் யாவையுமகற்றி
காப்பீரே எனைக் காப்பீரே சுத்தம் செய்வீரே
முத்தி சேர்ப்பீரே
4. தாரகை போல் நின்று இலங்கின சுத்தர்
பாதை விட்டோடி மறுத்து வீழ்ந்தாலும்
பாதை காட்டவும் பாதுகாக்கவும் பாதஞ்சேர்க்கவும்
வல்லவர்
5. மாட்சியே இன்னும் வந்திடுவீரே
மகிமையிலே என்னைச் சேர்த்துக் கொள்வீரே
மன்னவர் நீரே வல்லவர் இன்றும் வல்லவர்
என்றும் நல்லவர்
Comments
Post a Comment