மகிழ்வோம் மகிழ்வோம் இயேசு நாதரில்


1.       மகிழ்வோம் மகிழ்வோம் இயேசு நாதரில்
            அகமகிழ்ந்திடுவோமே மோட்ச ராஜ்யம்
            நமக்காய் ஆயத்தமாகுது என்றென்றும் ஆனந்தமே

2.         துன்பமுமில்லை, துயரமுமில்லை
            அன்பு நிறைந்த வீடாம் - இன்பம் நிறைந்து துதிப்பார்
            அங்கேயுள்ளோர் ரத்தத்தால் மீட்படைந்தோர்

3.         பஞ்சமுமில்லை பசியுமுமில்லை
            கொஞ்சமேயில்லை - தஞ்சம் இயேசு நாயகன்
            தரணியே ஜெயித்தவர் அரமனை ஆட்சி செய்வார்

4.         சாத்தானில்லை, சத்துருவில்லை
            கத்துவோரில்லை - அத்தன் இயேசுவோடு
            கூடிப்பாடி யோடி யுலாவலாம்

5.         தங்கத் தெருவாம் இங்கித வீட்டில்
            மங்களம் பாடலாம் - சொந்தம் இயேசு அண்ணலை
            ஸ்துதித்துப் பாடுவார் நாமும் பாடலாம்

6.         அல்லேலூயா பாடி மிகவும்
            ஆர்ப்பரித்திடலாம் நாம் - இல்லை மாய உலகம்
            அங்கேயில்லை பூரித்திடலாம்

7.         கெட்ட குமாரனும், பட்ட மனிதனும்
            துஷ்ட மானிடரும் - விட்ட இயேசு நாதரை
            முட்டியே அழைத்தால் பட்டணம் போகலாமே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு