30 June 2018

தாகம் தீர்க்கும் ஜீவ நதி


பல்லவி

                   தாகம் தீர்க்கும் ஜீவ நதி
                        தரணியில் உண்டோ எனத் தேடினேன்

சரணங்கள்

1.         அருவியின் நீரை பருகி விட்டேன்
            ஆற்றினில் ஊற்றையும் பருகிவிட்டேன்
            துரவுகள் கடலும் தாகம் தீர்க்க வில்லை
            தூரத்துக் கானலாய் ஆகியதே                          - தாகம்

2.         கானகம் சோலையும் தேடியபின்
            வானகம் நோக்கியே அபயமிட்டேன்
            கண்களைத் திறந்தேன் ஐந்தருவியென
            கன்மலையொன்றில் நீர் சுரக்கக் கண்டேன்        - தாகம்

3.         பருகியே வாழ்த்தினேன் தாகமில்லை
            அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை
            காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க
            கன்மலையாக என் இயேசு நின்றார்                   - தாகம்

4.         ஐயனின் திருவடி வீழ்ந்தேன் நான்
            ஆன்மாவின் தாகமும் தீர்ந்த தென்றேன்
            புன்னகை பூத்த புனிதனும் மறைய
            புது பெலனடைந்தேன் என் உள்ளத்திலே          - தாகம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...