மகிழ்வோம் இயேசுவில் மகிழ்வோம் பரன்


                        மகிழ்வோம் இயேசுவில் மகிழ்வோம் பரன்
                        மகிமை யுற்றுமே மகிழ்வோம்

அனுபல்லவி

            மகிழ்வோம், மகிழ்வோம், மகிழ்வோம், மகிமையில் மகிழ          - மகிழ்

சரணங்கள்

1.         வானில் யாவரும் மகிழ - இயேசு
            வாருமே என்றுமே பகர
            மாறுவோர்க்கொரு சிகரம் - மன
            தாரத் தற்பனதருள
            மகிமை, கனமும், மகிமையில் மிகவும் மகிழ     - மகிழ்

2.         சுத்த ஜீவனுடைய - தேவ
            புத்திரர் துலங்கிடவே
            சர்வ சிருஷ்டிகளுடைய - மகா
            கர்மங்கள் அகன்றகல
            மகிழும் தினமும், மகிபரின் தினமும் வரவே      - மகிழ்

3.         அடிமையானவர் கூடி - பரன்
            அளித்த பொன் முடி சூடி
            ஆயிரமாண்டுகளாகக் கடன்
            மாறியே அரசாள்
            மயிலும், குயிலும் ஆடும் புலியுடன் வாழ           - மகிழ்

4.         வானம் பூமியுமகல - நவ
            வானம் பூவுமே நிகழ
            சாபம் பாவமும் சகல - கடும்
            ரோக மோடியே விலக
            சுகமும், ஜெபமும், சகலரும் சகித்து மகிழ         - மகிழ்

5.         பொன்னால் வீதிகளுடைய - அரும்
            சொல்லால் உரைப்பதற்கரிய
            மின்னும் வச்சிர வொளியே - நரர்
            கண்டு களித்திடு மகலே
            கண்ணீர் கவலையும் நண்ணா நகரில் மகிழ      - மகிழ்

6.         பளிங்கு போல் ஜீவ நதியே - இரு
            கரையும் ஜீவனின் மரமே
            பசியும் தாகமுமில்லையே - அங்கு
            புசிக்க ஜீவனின் கனியே
            புசிப்போம், ருசிப்போம் இயேசுவில் நித்தியம் மகிழ       - மகிழ்

7.         சுத்த ஆவியும் சுதனும் - செய்த
            மீட்பின் செயலைப் பரனும்
            மற்றும் தூதர் கணமும் அங்கு
            உற்று உள்ளம் மகிழ
            போற்றிப் புகழ்வோம், தூதர் செயலில் மகிழ        - மகிழ்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு