மாறிடா எம்மா நேசரே - ஆ


1.       மாறிடா எம்மா நேசரே - ஆ
            மாறாதவர் அன்பெந்நாளுமே
            கல்வாரி சிலுவை மீதிலே
            காணுதே இம்மா அன்பிதே - ஆ

பல்லவி

                        ஆ! இயேசுவின் மகா அன்பிதே
                        அதன் ஆழம் அறியலாகுமோ
                        இதற்கிணையேதும் வேறில்லையே
                        இணை ஏதும் வேறில்லையே

2.         பாவியாக இருக்கையிலே - அன்பால்
            பாரில் உன்னைத் தேடி வந்தாரே
            நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
            நேசனாக மாற்றிடவே                           - ஆ! இயேசு

3.         உள்ளத்தால் அவரைத் தள்ளினும் - தம்
            உள்ளம் போல் நேசித்ததினால்
            அல்லல் யாவும் அகற்றிடவே
            ஆதி தேவன் பலியானாரே                     - ஆ! இயேசு

4.         ஆவியால் அன்பைப் பகிர்ந்திட - தூய
            தேவனின் விண் சாயல் அணிய
            ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
            ஆவலாய் அவரைச் சந்திக்க                - ஆ! இயேசு

5.         நியாய விதி தினமதிலே - நீயும்
            நிலையாகும் தைரியம் பெறவே
            பூரணமாய் அன்பு பெருக
            புண்ணியரின் அன்பு வல்லதே                - ஆ! இயேசு

6.         பயமதை நீக்கிடுமே - யாவும்
            பாரினிலே சகித்திடுமே
            அது விசுவாசம் நாடிடுமே
            அன்பு ஒருக்காலும் ஒழியாதே               - ஆ! இயேசு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு