இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா
நாமம் இன்ப நாமம்
1. பாவத்தைப்
போக்கும் பயமதை நீக்கும்
பரம
சந்தோஷம் பக்தருக்களிக்கும் -
இயேசுவின்
2. பரிமள
தைலமாம் இயேசுவின் நாமம்
பார்
எங்கும் வாசனை வீசிடும் நாமம் -
இயேசுவின்
3. வானிலும்
பூவிலும் மேலான நாமம்
வானாதி
வானவர் இயேசுவின் நாமம் - இயேசுவின்
4. நேற்றும்
இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை
என்றும் கைவிடா நாமம் - இயேசுவின்
5. முழங்கால்
யாவும் முடக்கிடும் நாமம்
மூன்றில்
ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் - இயேசுவின்
6. சாத்தானின்
சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப்
பிசாசை துரத்திட்ட நாமம் -
இயேசுவின்
Comments
Post a Comment