காப்பார் உன்னைக் காப்பார்


பல்லவி

                   காப்பார் உன்னைக் காப்பார்
                        காத்தவர் காப்பார், இன்னும் இனிமேல் காத்திடுவார்
                        கலங்காதே மனமே - காத்திடுவார்

சரணங்கள்

1.         கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார், அவர் கைவிடாதிருப்பார்
            ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார்
            என்ணிப்பார், என்ணிப்பார், எண்ணிப்பார்
            ஒன்றொன்றாயதை எண்ணிப்பார்                                                           - காப்பார்

2.         இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோ
            இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோ
            இல்லையோ, இல்லையோ, இல்லையோ
            மனஸ்தாபம் கொள்ளவில்லையோ                                                         - காப்பார்

3.         வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
            சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
            ஜெயமும், கனமும், சுகமும்
            இரக்கமா யுனக்களிப்பவரும்                                                                 - காப்பார்

4.         தாயின் கட்டில் வருமுன் உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
            காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது கை கொடுத்தெடுத்தவரே
            அன்பு கொண்டு மணந்தவரே                                                                - காப்பார்

5.         ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன் அடைக்கலமாயிருந்தார்
            காதலுடன்னவர் கைப்பணி செய்திடக் கனிவுடனாதரித்தார்
            பரிசுத்தத்தில் லங்கரித்தார்                                                                  - காப்பார்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு