சந்தோஷம் பொங்குதே


                   சந்தோஷம் பொங்குதே (2)
                        சந்தோஷம் என்னில் பொங்குதே
                        இயேசு என்னை இரட்சித்தார்
                        முற்றும் என்னை மாற்றினார்
                        சந்தோஷம் பொங்கிப் பொங்குதே

1.         வழி தப்பி நான் திரிந்தேன் - பாவப்
            பழியதைச் சுமந்தலைந்தேன்
            அவர் அன்புக் குரலே
            அழைத்தது என்னையே
            அந்த இன்ப நாளில் எந்தன்
            பாவம் நீங்கிற்றே                       - சந்தோஷம்

2.         சத்துரு சோதித்திட தேவ
            உத்திரவுடன் வருவான்
            ஆனால் இயேசு கைவிடார்
            தானாய் வந்து இரட்சிப்பார்
            இந்த நல்ல ஏசு எந்தன்
            சொந்தமானாரே                        - சந்தோஷம்

3.         பாவத்தில் ஜீவிப்பவர்
            பாதாளத்தில் அழிந்திடுவார்
            அவரும் பரலோகத்தில்
            ஆண்டவரோடு வாழவே
            நானும் தேவ அன்பையே
            நாளும் கூறிடுவேன்                  - சந்தோஷம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு