இரட்டிப்பான நன்மைகள் தந்திட


பல்லவி

                        இரட்டிப்பான நன்மைகள் தந்திட
                        இயேசு வாக்களித்தாரே

அனுபல்லவி

            முன்மாரி மேல் விண் மாறி மழையே
            உன்னதத்தினின்று வந்திறங்குதே                    - இரட்டிப்பான

1.         பெலத்தின் மேலே மா பெலனே
            புது பெலன் நாம் பெற்றிட
            சால்வை தனை எலிசா அடைந்தாற்போல்
            சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம்              - இரட்டிப்பான

2.         கிருபையின் மேல் மா கிருபை
            கர்த்தரிடம் நாம் பெற்றிட
            ஸ்திரீகளுக்குள் மரியாள் பெற்ற பாக்யம்
            ஸ்தோத்திரம் பாடி என்றும் தேடுவோம்              - இரட்டிப்பான

3.         ஜெயத்தின் மேலே மா ஜெயமே
            ஜெய தொனியாய்ப் பெற்றிட
            போர் முனையில் சிறு தாவீது போல
            போர் வீரராக என்றும் ஜெபிப்போம்                     - இரட்டிப்பான

4.         நம்பிக்கையின் மேல் நம்பிக்கை
            நல்விசுவாசம் பெற்றிட
            ஆதி அப்போஸ்தலர்கள் காலம் நடந்த
            அற்புதங்கள் நாம் என்றும் காணுவோம்              - இரட்டிப்பான

5.         பரிசுத்தம் மேல் பரிசுத்தம்
            பங்கமில்லாமல் பெற்றிட
            நீதியின் சூரியன் இயேசுவுடனே
            நீதி அணிந்து என்றும் ஆளுவோம்                  - இரட்டிப்பான

6.         மகிமையின் மேல் மா மகிமை
            மறு ரூபம் நாம் பெற்றிட
            கண்ணிமை நேரத்திலே பறந்தேகி
            கர்த்தருடன் நாம் என்றும் வாழுவோம்               - இரட்டிப்பான

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு