சுய அதிகாரா சுந்தரக் குமாரா


பல்லவி

          சுய அதிகாரா சுந்தரக் குமாரா
            சொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான             - சுய

சரணங்கள்

1.         அகிலத்தை ஒரு சொல்லில் அமைத்தனையே
            அதை ஒரு பம்பரம் போலிசைத்தனையே
            துகில் போல் ஆகாயமதை லகுவாய் சமைத்ததிலே
            ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த             - சுய

2.         கரை மத கற்ற குளம் புவியிலுண்டோ?
            கடலுக்கவன் சொல்லயன்றிக் கரைகளுண்டோ?
            திரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும்
            சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும்                    - சுய

3.         நரர் பலர் கூடி ஒரு மனை முடிக்க
            நாளெல்லாம் உழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே
            மர முயிர் தாது இன்னும் வான்புவி அனைத்தையும் ஓர்
            வார்த்தையால் ஷணப் பொழுதில் நேர்த்தியாய் உண்டாக்கி வைத்த    - சுய

4.         பாவ மனுவோர் முகத்தைப் பார்த்தீரே
            பாவப்பிணி தோள் சுமந்து தீர்த்தீரே
            சுவாமி உம்மைப் பற்றும் சுவாமி தாசருக் கிரங்க வேண்டும்
            தஞ்சம் தஞ்சம் ஓடி வந்தோம், கெஞ்சமனுக் கேட்டருள்வாய்               - சுய

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு