30 June 2018

பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றிப்


1.       பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றிப்
            பாடி மகிழ்ந்தாடி யங்கே கூடிட
            பரமானந்த கீதம் அங்கெழும்ப
            நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே

பல்லவி

                        நான் அங்கிருப்பேனே நான் அங்கிருப்பேனே
                        நான் அங்கிருப்பேனே, என் இயேசுவோடே!

2.         ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய
            அண்டினோரெவரும் அவரைச் சேர
            அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க
            நீ அங்கிருப்பாயோ, சொல் என் மனமே!             - நான்

3.         பேதுரு பவுலும் யோவானும் அங்கே
            பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும்
            இரத்தச் சாட்சிகளும் திரளாய்க் கூட
            நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே!             - நான்

4.         ஜெகத்தில் சிலுவை சுமந்தோரெல்லாம்
            திருமுடி யணிந்திலங்கிடவும்
            தேவ சேயர்களா யெல்லாரும் மாற
            நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே!             - நான்

5.         சோதனைகளை வென்றவரெவரும்,
            துன்பம் தொல்லைகளைச் சகித்தவரும்
            ஜோதி ரூபமாய் சொர்லோகில் ஜொலிக்க
            நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே!             - நான்

6.         கன்னிகையைப் போல் கர்த்தன் சபையன்றும்
            மன்னர் மணாளனேசுவை மணந்து
            பின்னும் சொல்லரிதாம் நிலை ருசிக்க
            நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே!             - நான்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...