30 June 2018

மாயையில் மனம் ஓடவையாதே


1.       மாயையில் மனம் ஓடவையாதே - உன்னை
            விட்டாலது கொஞ்சம் நில்லாது;
            பாவையில் கட்டின கயிற்றைப் போல் - அகற்றுப்
            போகக் காலம் கிட்டி வருகுதைய்யோ;
            ஒரு வழி பாரு தினம் உன்னை நேரு

2.         பூலோக வாழ்வதின் புகழென்ன? - பூ
            வாடி உதிர்ந்தால் அதின் நிறமென்ன?
            மாய உலகிலுனக்கென்ன? - ஜீவன்
            வம்பில் விடுத்தால் அதன் பலமென்ன?
            மாயை மறந்தோடு சுக இடம் தேடு

3.         பலமுள்ள சிம்சோனைக் குறைவு செய்த - படு
            பாதகி நீயே தாசி தெலீலாளே!
            மன திழந்த மொழியைக் கேட்டாயே - கெட்ட
            பெலிஸ்தர் கையிலவனைக் கொடுத்தாயே
            படுபாதகியே, நரகவாசி நீயே

4.         கழுதை எலும்பால் ஜெயங்கொண்டவனே - நீ
            அழுது புலம்பி மாவரைப்பதென்ன?
            பரகதி வாழ்வை நீ கெடுத்தாயே - பலர்
            பரிகாசம் செய்ய உன்னைக் கொடுத்தாயே
            மதி மறந்தவனே, துயரடைந்தவனே

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...