30 June 2018

அதிசயமான ஒளிமய நாடாம்

கன்:325

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                             பல்லவி

 

                   அதிசயமான ஒளிமய நாடாம்

                        நேசரின் நாடாம் - நான்

                        வாஞ்சிக்கும் நாடாம் - என்

 

                             சரணங்கள்

 

1.         பாவம் இல்லாத நாடு

            ஒரு சாபமும் காணா நாடு

            நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்

            உன்னதத்தில் ஓசன்னா அல்லேலூயா - அதிசய

 

2.         சந்திர சூரியன் இல்லை

            ஆனால் இருள் ஏதும் காணவில்லை

            தேவ குமாரன் ஜோதியில் ஜோதி

            நித்திய வெளிச்சமாவார் - என்றும் பகல் - அதிசய

 

3.         விதவிதக் கொள்கை இல்லை

            பலப் பிரிவுள்ள பலகை இல்லை

            ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்

            எங்குமே அன்பு மயம் - அன்புள்ளோர் செல்லும் - அதிசய

 

4.         பிரச்சனை ஏதும் இல்லை

            வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை

            மொழி, நிறம், ஜாதி பற்று உடையோர்

            எவருமே அங்கு இல்லை - அன்பே மொழி - அதிசய

 

5.         கடைத்தெரு ஏதும் இல்லை

            தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை

            தரித்திரர், செல்வர், சிறியவர், பெரியோர்

            ஆகிய சிறப்பும் இல்லை - எல்லாம் சமம் - அதிசய

 

6.         பல பலத் திட்டம் இல்லை - ஆளும்

            சட்டங்கள் ஏதுமில்லை

            காவல் துறையில்லை, கண்டிப்பும் இல்லை

            மனிதனின் ஆட்சி இல்லை - பேரானந்தம் - அதிசய

 

7.         இயேசுவின் இரத்தத்தினால் - பாவம்

            கழுவினால் செல்லலாமே

            இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்

            இப்பூமியில் எவரும் வேண்டாம் - இன்றே வாரீர் - அதிசய

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...