உலகில் நீ ஒர் தனிப் பிறவி


1.       உலகில் நீ ஒர் தனிப் பிறவி
            உன்பால் இயேசு அருள் மேவி
            தமது ஜீவனை உன்மேல் ஊதி
            பாருக்குள் அனுப்பினார் இது பாரீர்

                        உலகின் கண்ணிற்குப் புரியாத
                        கல்வியில் சான்றோரும் விளங்காத
                        வாழ்க்கை ஒன்றே நீ மேற்கொண்டுள்ளாய்
                        கவனம் கவனம் முன் ஏகிச் செல்வாய்

2.         சிரிப்பார் சீறுவார் முணுமுணுப்பார்
            உன் நிலை அறியாத மனிதர் பலர்
            உன் ஜெபம் பாட்டு பேச்சு எல்லாம்
            புரியார் பலர் உன்னை பகடி செய்வார்

3.         கிறிஸ்துவை வெளிதள்ளிக் கொலை செய்தார்
            பக்தர்கள் பலரையும் சிறை செய்தோர்
            கம்பத்தில் கட்டி வதை வதைத்தோர்
            பலரும் இப்பூமியில் நிரம்ப உண்டு

4.         தயக்கமும் கலக்கமும் நடையில் வேண்டாம்
            லௌகீகக் கவலைகள் எதுவும் வேண்டாம்
            கல்வாரி மேட்டினில் கடைமனிதன்
            ஏறும் வரை நாம் உறங்க வேண்டாம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே